Wednesday, April 14, 2010

எதுவும் நிலை இல்லை....

குழந்தைகளாக இருந்த பொழுது நாம் பிடிவாதம் பிடித்து வாங்கிய பொம்மை இப்பொழுது நமக்கு ஏதாவது முக்கியம் தருவதா? அந்த பொம்மை வாங்கிய விதத்தை பார்த்தால் என்ன சிறு பிள்ளை தனமாக தெரியும். இன்று எதுக்காக நாம் பிடிவாதம் பிடிக்கிறோம்மோ நாளை அது சிறு பிள்ளையாக தெரியும்.

Monday, April 12, 2010

கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் ..

ஒரு ஆண் மகன் கல்யாணத்திற்கு முன் தன கனவில் வரும் பாடல் இது:


அதே ஆண் மகன் கல்யன்னதிர்க்கு பின் பாடும் பாடல் அல்லது வீட்டுக்கு வரும் பெண் பாடும் பாடல் இது:



அந்த பெண் புகந்த வீட்டில் செய்யும் லூட்டி தான் இந்த பாட்டு

நடப்பை தொடர ..

முழுகாத நட்பு என்பது கிடைக்காத பொக்கிஷம் . இந் நாளில் நட்பு என்பது லாபம் நஷ்டம் பார்ப்பது ஆகி விட்டது யார்ருக்கும் யாரை பற்றியும் கவலை இல்லை. எனக்கு காரியும் நடந்தால் போதும் .

இரு நண்பர்கள் தங்கள் நட்பை தொடர ஒரு பொதுவான குறிக்கொள் தேவை . இல்லையென்றால் நட்பின் தொடர்ச்சியை தொடர முடியாது. அது மட்டும் போதாது ஒளிவு மறைவு இருந்தால் நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்.

Saturday, April 10, 2010

அடங்கி போவது இப்படி.....

சில நேரங்களில் நாம் நமது போக்கை விட்டு தர வேண்டும். எல்லா நேரங்களிலும் நாம் ஒரே மாதிரி இருக்க முடியாது. விட்டு தந்து பின்னாளில் பிடிக்க வேண்டும். இதை தான் சாமர்த்தியம் என்று சொல்லுவார்கள்.

அடக்குவது எப்படி....

காட்டில் யானையை பிடிக்க பழக்க பட்ட பெண் யானையை வைத்து ஆண் யானையை பிடிக்கின்றனர். அதை பழக்க படுத்த ஏற்கெனவே பிடிபட்ட யநநைஐ வைத்து அதன் முரட்டுத்தனத்தை அடக்குகின்றனர். இப்படி நம் வாழ்வில் அடங்க மறுக்கிற "ஜந்துகளை" நாம் அடக்க வேண்டும் இல்லையேல் அது நம் தலை மீது உட்கார்ந்து கொண்டு நம்மை அடக்கி ஆளும்.

Friday, April 9, 2010

இடைவெளி தேவை....

எல்லா உயிர் இனங்களுக்கும் சூரியஒளி தேவை தான். ஆனால் அதே சூரியஒளி அதிகமானால் எந்த உயிர்களும் வாழ முடியாது. அதேபோல் , குரு என்பவர் மனித வாழ்க்கைக்கு மிக அவசியம் ஆனால், அவர்யிடமிருந்து ஒரு இடைவெளி வைத்து கொள்வது நல்லது.

Thursday, April 8, 2010

முதுகில் குத்து......

நல்ல பழகு உன்னை மற்றவன் நம்ப வேண்டும். அவன் உன் மீது அதிக நம்பிக்கை வைத்து பிறகு அவன் கழுத்தை அறுத்து விடு. அசந்து இருக்கிற சமையத்தில் முதிகில் குத்து.

Wednesday, April 7, 2010

ஹவுஸ் புல் .....

வர வர எல்லா வியாபாரம் படுத்து போகுது என்று கவலை படுபவர்கள் அதிகம். அனால் எல்லாரமே படுக்கவைக்கம் வியாபாரம் ஒன்று இருக்கு. ஒயின் ஷாப் இந்த வியாபாரத்துக்கு தொய்வு என்பது கிடையாது. ஹவுஸ் புல்...........

Tuesday, April 6, 2010

வேர்வை குளியல்

வெயில் காலம் கொளத்த ஆரம்பித்து விட்டது. இதில் நெரிசில் உள்ள பேருந்தில் பயணம் என்பது கொடுமையிலும் கொடுமை. பேருந்துவில் இருந்து இறங்கி வரும் பொழுது ஒரு சின்ன வேர்வை குளியலுடன் வெளியில் வர வேண்டும். வாழ்க சென்னை வெயில் !

உலகம் எங்கையோ போகுது....

ஒரு ஆள் கொஞ்ச நேரம் கை கால் அசைக்காமல் இருந்தால் அவன் மீது துணியை போட்டு மூடி காசு வாங்கும் கூட்டம் இருக்கும் சமுகம் இது . இதில் பொய் சொல்லி பந்தம் பாசம் என்று ஏமாறாதே.

அள்ளு அள்ளு இருக்கிற வரையில்

நாளை பற்றி கவலை படுவது முட்டாள் தனம் சமயம் கிடைக்கும் பொழுது சுருட்டி விடவது தான் புத்திசாலித்தனம் . ஆகையால், இருக்கும் போதே அனுபவி ஆப்புறம் கவலை வந்து வாட்டகூடாது

Monday, April 5, 2010

குளிர் பானங்களின் ஆதிக்கம் ...

சென்னை போன்ற வெயில் வெளுத்துக்கட்டும் நகரங்கள் இப்பொழுது குளிர் பானத்தின் பிடியில் தான் தாக சாந்தி செய்து கொண்டு வாழ்ந்து கண்டு இருக்கின்றது. பெசமுள் ஒரு சர்பத் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். நல்ல காசு பன்ற தொழில்.

Sunday, April 4, 2010

கற கற என்று கற க்க வேண்டும்...

நடப்பதை உன்னிப்பாக கவனி. நீ எந்த பக்கமம் சாயாதே . பின்னாளில் யார் எப்படி இருப்போமோ . உனக்கு என்று நேரம் வரும் அப்பொழுது கற கற என்று கறந்து விடு. அது வரையில் ஜஸ்ட் ரிலாக்ஸ்...........

Saturday, April 3, 2010

ஆசை யாரைவிட்டது

கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை ஒழங்கா பாங்கில் போடாமல் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசம் போயி அழுது கொண்டு இருப்பதை பார்த்து சிரிப்பத அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

Friday, April 2, 2010

மாற்றம் தேவை...

அது என்ன ஆயுள் காப்பிடு விளம்பரங்களில் விதவை மனைவி கணவன் இறந்த பிறகு ஆயுள் காப்பிடு தொகையை பெறுவது போல் காட்சி அமைவது. ஏன் மனைவி இறந்த பிறகு கணவன் தொகையை வாங்கவது போல் காட்சி அமைக்க கூடாது .
ஒரு ஆண் மகன் சாவில் குடும்பம் வாழ வேண்டுமா ?

அடங்க வது ஏன்....

எல்லாம் பழக்கம் தான் காரணம். யானை அங்குசத்திற்கு ஏன் பனியது? அது குட்டி யாக இருக்கம் போதே அதற்க்கு பழக்கம் செய்து விட்டதால் அதன் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டதின் விளைவு.

அதே போல் மனிதனக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லி சொல்லி ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் ஒரு கலாச்சாரம் உருவானது. இல்லையேல் அவனும் நாயை போல்(இப்பொழுது மட்டும் என்ன வாழ்வது) சுற்றி தன் இனத்தை பெருக்கி கொண்டு இருப்பான்.

Thursday, April 1, 2010

எது போனால் என்ன..........

ஒரு மனிதனக்கு வெற்றி மீது வெற்றி மிக விரைவில் கிடைத்தது .அதே வேகத்தில் காலம் அவனக்கு படங்களை கற்றுத்தந்தது . அவனிடம் இருந்த பெயர் புகழ் எல்லாம் அவனை விட்டு சென்றது . ஆனால் அவனின் அழகான மனைவி தான் அவனிடம் இருந்த ஒரே பொருள்............
இப்பொழுது சொல்லுங்கள் அவன் மீதும் இழந்த நிலையில் மீதும் கை பற்று வானா மாட்டானா.....

கண்டிப்பாக அவன் இழந்ததை அடைய போகிறான். அவன் மிக பெரிய காரியவாதி எதையும் பைசாவில் எல்லாவற்றையும் காசு பண்ணும் எண்ணம் கொண்டவன்.