என் தெருவில் நாய் தொல்லை அதிகமாக இருந்தது.இப்போழுதுஎல்லாம் நாய் வண்டி வருவதில்லை. ஆகையால் நாய்கள் தன இனத்தை பெருக்கி கொள்ள வசதியாகி விட்டது. மாநகராட்சிக்கு போன் செய்தால் நாயை தூக்கி சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பவும் அதே தெருவில் கொண்டுவந்து விடுகின்றனர்.
என் தெருவில் இருந்த ஒரு ஜோடியை பிரித்த பெருமை என்னை சேரும். ஆண் நாய் திரும்பி வரவில்லை ஆனால் பெண் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து விட்டுவிட்டனர். சென்ற மழை காலத்தில் பல நாய்கள் எங்க தெருவில் வந்து "ஜல்சா" செய்து விட்டு சென்றது அனால் ஒரு குட்டியும் பெற்று எடுக்க வில்லை அந்த பெண் நாய். அது என்னை பார்கையில் அது எனக்கு சாபம் இடுவது தெரியுது. என்ன செய்வது தொல்லை என்று வந்து விட்டால் சும்மா இருக்க முடியுமா...........