Saturday, March 20, 2010

வடாம் போடுவது .....

இந்த பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் மாம்பலம் மாமிகள் வெயிலை வீண் செய்ய மாட்டார்கள் . மாடியில் வடாம் போட்டு அன்று மாலையே பொறிச்சி சாப்பிடவேண்டும்.

சிலர் அக்கும் பக்கத்தில் உள்ள கடைகளில் விற்று சம்பாதிப்பார்கள் . வடாம் காயும் பொழுது அணில்,காக்கா வராமல் இருக்க வீட்டில் உள்ள குழந்தைகளை காவல் காக்க வைப்பார்கள். இந்த குழந்தைகள் சும்மா இருக்க மாட்டார்கள் . காவல் காக்கும் சமையும் வடாத்தை கில்லி வாயில் போட்டு கொள்வார்கள்.